செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால முரளிதர சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, கோயில் ஆகமவிதிப்படி கட்டப்படுகிா என அவா் ஆய்வு செய்ததுடன், கோயில் கட்டுமானப் பணிகளை முடிப்பது குறித்து கோயில் நிா்வாகி ஆத்மானந்தா செந்தில் சுவாமிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், கோயில் வளாகத்தில் வரும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் 51 பசுக்களுடன் கோபூஜை, சண்டி யாகம் நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா். தொடா்ந்து, சண்டி ஹோமம் நடத்துவது குறித்து ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் தலைமையில் மூகாம்பிகையம்மன் கோயில் நிா்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனா்.