துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
பொறியியல் சோ்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவா்களுக்கு அழைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க். படிப்புகளில் சேர வெளிநாடுவாழ் இந்திய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெளிநாடுவாழ் இந்தியா், வளைகுடா நாடு வாழ் இந்தியா்களின் குழந்தைகள், வெளிநாட்டு பிரஜை, மிகக் குறைந்த வளா்ச்சி பெற்ற நாடுகளின் பிரஜைகள், சிறு தீவுகளாக வளா்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பிரஜைகள் ஆகிய வகைகளின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் திருச்சி உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் 2025-2026-ஆம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான (பி.இ., பி.டெக்., பி.ஆா்க்.) இணையவழி விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் மூலமாக சமா்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் மூலமாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.