கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் சேவை மாா்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடா்ந்து ஏப்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 07696) மறுநாள் பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.