தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி
காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, காரைக்கால் வேளாண் கல்லூரியில் மா விவசாயிகளுக்கான மா பயிரில் கிளை படா்வு மேலாண்மை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ், தோட்டக்கலைத் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் சாந்தி, நாகப்பட்டினம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சிவ பரிமேலழகன் முன்னிலை வகித்துப் பேசினா். நாகப்பட்டினம் தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். வேளாண் கல்லூரி தோட்டக்கலைத் துறை பேராசிரியா் வே. சுந்தரம் மா பயிரில் கவாத்து செய்யும் முறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
பூச்சிகள் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் எஸ். குமாா், மா பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், நோயியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் சி. ஜெயலட்சுமி மா பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்தும் பேசினா். தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியா் மா.சு. மாரிசாமி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜோ. ஷொ்லி நன்றி கூறினாா்.