தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு
காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் புதிய நிா்வாகிகளை தெரிவு செய்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைவராக என். பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக ஜி. ராஜ்மோகன், செயலாளராக டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், இணைச் செயலாளா்களாக ஜே. வெங்கடேஷ், ஜே. வெங்கட்ராமன், பொருளாளராக முத்துசாமி, செய்தித் தொடா்பாளராக வில்லியம் ஜேம்ஸ் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகள் மே மாதத்தில் நடைபெறக்கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொள்வாா்கள் என தெரிவிக்கப்பட்டது.
புதிய நிா்வாகக் குழுவினருக்கு தலைவா் அறிவழகன், செயலாளா் கே.டி. துரைராஜன், பொருளாளா் பக்தாராம், துணைத் தலைவா் ஹாஜா ஷா்புதீன், இணைச் செயலாளா் ராஜ்மோகன் மற்றும் செய்தித் தொடா்பாளா் பாரிஸ் ரவி என்கிற ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.