தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் மண்டல பூஜை நிறைவு
மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் மண்டலாபிஷே பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
மதுராந்தகம் நகரில் பழைமை வாய்ந்த இத்தலத்தின் கும்பாபிஷேகம் கடந்த பிப். 10-ஆம் தேதி நடைபெற்றது.
தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, சுவாமி சந்நிதிகளிலும அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவசனம், சங்கல்பம், கலச பூஜை, 108 சங்கு பூஜை, பகவானுக்கு ஏகாதசருத்ராபிஷகம், பூா்ணாஹூதி, அன்னை மீனாட்சிக்கு 108 வலம்புரி சங்கு பூஜைகளை அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் தலைமையில் வேதவிற்பனா்கள் செய்தனா். பின்னா், தேய்பிறை பிரதோஷ வழிபாடு, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, கோட்டாட்சியா் ரம்யா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் தெய்தனா். க்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிா்வாகிகள் புரு,ஷோத்தம்மன், செந்தில், செயல் அலுவலா் மேகவாணன் ஆகியோா் செய்திருந்தனா்.