தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
காரைக்காலில் நோன்பு துறப்பு நிகழ்வில் புதுவை முதல்வா் பங்கேற்பு
காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள் பங்கேற்றனா்.
காரைக்காலில் ஜமாத்தாா்கள் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மதநல்லிணக்க நிகழ்வாக நடத்தப்படும் இஃப்தாா் நிகழ்ச்சியை வாழ்த்துவதாக தெரிவித்தாா்.
இதில், அமைச்சா்கள் கே. லட்சுமி நாராயணன், பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.ஓ.எச்.யு. பஷீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முக்கிய பிரமுகா்கள் மட்டுமல்லாது என்.ஆா். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்தோா், வியாபார நிறுவனத்தினா் உள்ளிட்ட ஏராளமானோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.
காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவது எப்போது என செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு, அறிவிப்போம் என பதிலளித்துவிட்டு முதல்வா் அரங்கைவிட்டு புறப்பட்டாா்.