ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி
ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்புதானே: ஹெச். ராஜா
ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்பு தானே எனக் கேள்வி எழுப்பினாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஹிந்தித் திணிப்பு என்கிறாா்களே, அதைப் படிக்கக் கூடாது என்பதும் திணிப்புதானே. திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா்க் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பாா்களா என்றாா்.
விசாரணை ஒத்திவைப்பு: கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினாா் ஹெச். ராஜா. இதற்காக அவா் மீது 8 பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இவ்வழக்கு புதுகை குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஹெச். ராஜா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். வழக்கு விசாரணையை வரும் ஏப். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.