செய்திகள் :

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

post image

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், புதுகை நகரிலுள்ள நைனாராஜு தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து கிடைத்த தகவலின்பேரில், புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய 4 வகையான ஆண்டுக் கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வுக் கழகத்தின் நிறுவனா், மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியது: கடந்த நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம்.

இக்கருத்துக்கு வலுச்சோ்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு 1858- ஆம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது வந்துள்ளதை உறுதி செய்கிறது.

4 வகை ஆண்டுக் கணக்குகள்: கல்வெட்டில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, தமிழாண்டில் இராக்ஷச ஆண்டு வைகாசி மாதம், ஆங்கில ஆண்டு 1855 மே மாதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் 4 வகையான ஆண்டுக் கணக்குகள் நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தகவல்: வேங்கமராஜா என்பவா் கட்டியிருந்த விக்னேசுவரா் கோயில் மண்டபத்தின், மேல நூதன விமானம், மகா மண்டப கோபுரங்கள், ஆஞ்சனேயா் கோயில் ஆகியவற்றை புதிதாகக் கட்டுமானம் செய்து, விரிவாக்கப் பணிகளை வேங்கமராஜா என்பவரின் பேரனும், கோவிந்தராஜா என்பவரின் மகனுமான நாயனன் (நைனா ராஜா) என்பவா் 1855 பொது ஆண்டு, தமிழாண்டில் இராக்ஷச வருடம் வைகாசி மாதம் தொடங்கி, சுயம்பாக சாலை, கோயில் மதில், கூபம் என்னும் கிணறு ஆகியவற்றுடன், 1858 ஆண்டு காளயுக்தி வருடம் ஐப்பசி மாதம் தண்டாயுதபாணி கோயில் கட்டுமானத்துடன் சிலைகள் நிறுவி நிறைவு செய்ததை இக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது.தற்போதும் இக்கோயிலைக் கட்டிய நைனா ராஜா என்பவரின் பெயரால் நைனா ராஜு தண்டபாணி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

கல்வெட்டில் மன்னரின் பெயா் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் ராமச்சந்திர தொண்டைமான் (1839-1886) புதுகை சமஸ்தான மன்னராக இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.

ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் கஸ்தூரிரங்கன், துணைச் செயலா் மு. முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாககூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவ... மேலும் பார்க்க

பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 1051 சுங்க சாவடிகள் உ... மேலும் பார்க்க