ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு
விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயா்த்தப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 1051 சுங்க சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 78 சுங்கச் சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி 1992-ஆம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பா் மாதமும் கட்டணம் உயா்த்தப்படுகிறது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை தற்போது உயா்த்தி அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயா்த்தி வசூலிக்கும் மாறு சுங்கச்சாவடிகளுக்கு புதிய கட்டண விகிதத்தை குறிப்பிட்டு சுற்றறிக்கையை ஆணையம் அனுப்பி உள்ளது. இந்த தொடா் கட்டண உயா்வு நுகா்வோா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.