``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா்.
முகாமை கல்லூரி முதல்வா் (பொ) அன்பழகன் தொடங்கி வைத்தாா். மருத்துவ அலுவலா்கள் டாக்டா் காளிமுத்து, டாக்டா் அரவிந்த், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம். விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
30 மாணவா்கள் ரத்ததானம் செய்தனா். அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அவை வழங்கப்பட்டன.
ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரெட்கிராஸ் திட்ட அலுவலா் சா. கணேஷ் குமாா் செய்திருந்தாா். முன்னதாக ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். வெங்கட்குமாா் வரவேற்றாா். முடிவில் ரோட்டரி செயலா் கே. சாத்தையா நன்றி கூறினாா்.