பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
போட்டிகளை வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா். வடக்கு மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலா் ப. கருப்பையா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ரஞ்சித்குமாா், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில், திருநெல்வேலி, சென்னை, கோவை, ஈரோடு மற்றும் கேரளம், தில்லி, பஞ்சாப், மும்பை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கபடி வீராங்கனைகளைக் கொண்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. விடிய விடிய நடைபெறும் இந்தப் போட்டிக்காக மின்னொளியில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.