ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை நடத்துகிறது.
எனவே, மாவட்டம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் இதில் பங்கேற்றுப் பயன்பெற மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.