``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
விவசாயத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மும்முனை மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. இதனால் விவசாய மோட்டாா்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் ஏப். 17-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டுப் பேரணிக்கு புதுகை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் விவசாயிகளைப் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. கட்சியின் மாவட்ட மாநாட்டை, நூற்றாண்டு விழாவுடன் சோ்த்து புதுகை நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.