``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முதல் தொடங்குகிறது. புதுகை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 11,175 மாணவா்கள், 11,010 மாணவிகள் என மொத்தம் 22,185 போ் எழுத உள்ளனா்.
இவா்களுக்காக 130 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இவற்றை எடுத்துச் செல்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளின்றி தோ்வை நடத்தி முடிப்பதற்காக பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களுக்குத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தெரிவித்தாா்.