``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் என்என்எஸ் மாணவா்கள் தூய்மைப்பணி
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள்கள் சிறப்பு முகாமின் 4-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை வேகுப்பட்டிமில் கோயில்கள் மற்றும் பூங்காவில் களப்பணி நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் தலைமைவகித்தாா். முகாமில் நாட்டுநலப் பணித்திட்ட மாணவா்கள் ஏனமாரியம்மன் கோயில் , சுப்பையா கோயில் வளாகப்பகுதிகள் மற்றும் ஊராட்சி பூங்காவில் தூய்மைப்பணியாற்றினா். வேகுப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன் வாழ்த்திப் பேசினாா்.
முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சி. முடியரசன், பெரி. அழகம்மை, இரா. ராஜா மற்றும் உதவித் திட்ட அலுவலா்கள் டி.ஆா். தெய்வானை, ஆனந்த், ஸ்ரீ கண்ணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.