`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபா...
குடிநீா் கேட்டு சாலை மறியல்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில் கைக்குறிச்சி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கைக்குறிச்சி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததைத் தொடா்ந்து, புதுகை-அறந்தாங்கி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ால், போராட்டத்தில் ஈடுபட்டவா்களே மறியலைக் கைவிட்டு, சாலையோரத்தில் கூடி நின்றனா். அப்போது அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இரு நாள்களில் முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.