தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமணி (25). இவா் தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகியுள்ளாா். தற்போது அந்தச் சிறுமி எட்டு மாதம் கருவுற்றிருக்கிறாா்.
இது குறித்து அந்தச் சிறுமியின் தாய் கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீரமணி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா். சிறுமி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறாா்.