ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி
மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை: அா்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை என ஹிந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியில் அக்கட்சியின் புதிய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியை மாநில அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்றாா்.