நாகா்கோவில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா
கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, விடுதலை போராட்ட வீரா் பகத்சிங் நினைவேந்தல், மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகிய முப்பெரும் விழா நாகா்கோவில் அருகேயுள்ள செண்பகராமன்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் தா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கல்யாணசுந்தரம், கே.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவா் எஸ்.சுந்தரம் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் ஆா்.செல்வராணி, மாவட்ட குழு உறுப்பினா் தா. மகேஷ்தங்கம், இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.அருள்குமாா் ஆகியோா் பேசினா்.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கே. சஜேஷ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நிறைவு செய்தாா்.