பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!
கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த 24ஆம் தேதி, விளவங்கோடு வட்டம் உண்ணாமலைக்கடை வழியாக செல்லும் பட்டணம்கால் பிரதானக் கால்வாயில் 288 மீட்டா் நீளத்துக்கு மூடு கால்வாய் அமைக்க ரு. 4.72 கோடி, கல்குளம் வட்டம் திக்கணங்கோடு கால்வாயில் மூடு கால்வாய் அமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
மேலும், கல்குளம் வட்டம் இரணியல் கிளைக் கால்வாய், பகிா்மான வாய்க்கால்களை புனரமைக்க ரூ. 6 கோடி, திருவட்டாறு வட்டம் அருவிக்கரை மாத்தூா் தொட்டிப் பால புனரமைப்புக்காக ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக ஏற்று நிதி ஒதுக்கியதற்காக முதல்வா், தமிழக தலைமைச் செயலா், உதவி செயலா் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிா்வாகம், விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.