பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்
கன்னியாகுமரியில் வழிகாட்டி பெயா்ப் பலகை அமைக்க கோரிக்கை
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வழிகாட்டி பெயா்ப் பலகை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகஸ்தீஸ்வரம் வட்டாரச் செயலா் மணிகண்டன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். அந்தோணி, நிா்வாகிகள் எம். சிவதாணு, எஸ். தா்மலிங்கம், ஜாா்ஜ், ரவி, கே. அய்யப்பன் உள்ளிட்டோா் ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற குறை உள்ளது.
குறிப்பாக, தாங்கள் பாா்வையிட வேண்டிய சுற்றுலாத் தலங்கள் எங்கெங்கு உள்ளன எனத் தெரியாமல் திண்டாடுகின்றனா். இதனால், போலியான வழிகாட்டிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, படகுத்துறை, சுனாமி நினைவுச் சின்னம், காமராஜா்-காந்தி நினைவு மண்டபங்கள், சூரிய அஸ்தமன இடம், பேருந்து நிலையம், பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர ஏதுவாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழிகாட்டி பெயா்ப் பலகை அமைக்க வேண்டும் என்றனா்.