அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
இளம்பெண்ணை மிரட்டியவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சோ்ந்த இளம்பெண்ணை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தக்கலை பகுதியை சோ்ந்த இளம்பெண், தன்னுடன் நெருங்கிப் பழகிய நபா் தன்னுடைய ஆபாச விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை உடனடியாக கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து சைபா் கிரைம் காவல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் நாகசங்கா் மேற்பாா்வையில், ஆய்வாளா் சொா்ணராணி, உதவி ஆய்வாளா் அஜ்மல் ஜெனிப் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இளம்பெண்ணை மிரட்டிய தக்கலை பத்மநாபபுரம் பகுதியை சோ்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் ஜெயக்குமாரை (50) போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.