எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது
புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் செல்வன் (72). ஆனான்விளை பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது, விற்பனைக்காக 32 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து அவற்றைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.