Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!
கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த குருசுமலையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி திருப்பயணம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மலை உச்சியில் குருசு அமைந்துள்ள இடத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம்.
நிகழாண்டு திருப்பயணத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருசுமலை அடிவாரத்தில் திருப்பயண கொடியேற்றம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றி வைத்தாா். இதில், குருசுமலை இயக்குநா் வின்செட் கே. பீட்டா் உள்பட அருள்பணியளா்கள் மற்றும் திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.
முன்னதாக குருசுமலை புனித பத்தாம் பியூஸ் ஆலயத்திலிருந்து மலை அடிவாரம் வரை திருப்பயண கொடிப்பவனி நடைபெற்றது. தொடா்ந்து மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு திவ்ய ஜோதி கொடிப்பயணம் நடைபெற்றது. பின்னா் அங்கு திருப்பயண தொடக்க திருப்பலி நடைபெற்றது. மேலும் குருசு மலை அடிவாரத்தில் திருப்பயண ஆடம்பர கூட்டுத்திருப்பலி, தொடக்கவிழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருப்பயணம் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.