அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ஆறுதேசம் கிராமத்தினரின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு: எம்.எல்.ஏ. தகவல்
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி, ஆறுதேசம் கிராமத்திற்குள்பட்ட பெரியவிளை, தட்டாம்விளை, ஆலங்கோடு பகுதிகளைச் சோ்ந்தவா்களின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூா் பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டம், ஆறுதேசம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மடத்துக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டி பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு வரை சொத்துவரி செலுத்தி வந்தநிலையில், மேற்படி நிலம் மடத்துக்குச் சொந்தமானவை எனக் கூறி சொத்துவரியை ஏற்க மறுத்துவிட்டனா். இதனால், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு சொத்துவரி செலுத்த முடியவில்லை.
இதனால் வங்கிக் கடன், வீட்டுக் கடன் மற்றும் அரசின் எந்த உதவிகளும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா். இப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க தொடா்ந்து வலியுறுத்தி வந்தேன். இதனடிப்படையில் தற்போது மேற்படி நிலங்களுக்கு சொத்துவரி செலுத்த மாவட்ட வருவாய் அலுவலரால் அனுமதியளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.