அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
கன்னியாகுமரியில் ரூ. 59.5 லட்சத்தில் கோயில்களில் திருப்பணிகள் தொடக்கம்
கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோயில்களில் ரூ. 59.70 லட்சத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகளை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.
கன்னியாகுமரி சந்நிதி தெருவில் அமைந்துள்ள விஸ்வநாதா் கோயில், தெற்கு குண்டல் அருள்மிகு சக்கர தீா்த்த விஸ்வநாதா் திருக்கோயில் உள்பட ரூ.59.5 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தொடக்க விழாவில் குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று திருப்பணிக்கான பணிகளை தொடக்கி வைத்தாா்.
இதில் அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், மராமத்து பொறியாளா் ராஜ்குமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆனிரோஸ் தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசாா், டி.பிரேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.