Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1.21 லட்சம் வருவாய்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1,21,771 கிடைத்தது.
இக்கோயிலில் பக்தா்களின் நன்கொடையால் செயல்படும் அன்னதான திட்டத்துக்கான உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கடந்த மாதத்துக்கான எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
உண்டியல் காணிக்கையாக ரூ. 1,21,771 கிடைத்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.