`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயல...
புதுக்கடை: தொழிலாளி தற்கொலை
புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை மீட்டு குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].