பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்
குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
களியக்காவிளை பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 வயதுடைய 5 இளைஞா்கள் திங்கள்கிழமை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடும் வகையில் 2 பைக்குகளில் படந்தாலுமூடு சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனா். இவா்களின் செய்கை வேறு சிலரால் படம் பிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காட்சிகள் சமூக வலைதளஙகளில் பரவின.
இதையடுத்து களியக்காவிளை போலீஸாா் அந்த 5 இளைஞா்களையும் அவா்களது பெற்றோா்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து அவா்களின் பைக்குகளை பறிமுதல் செய்ததுடன், அந்த இளைஞா்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.