MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!
ஹைதி நாட்டில் குற்றவாளி கும்பல் தாக்கியதில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூற்ப்படுகின்றது.
கரிபியன் கடல் பகுதியிலுள்ள ஹைதி நாட்டில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் பணியமர்த்தப்பட்ட கென்யா நாட்டு அதிகாரி ஒருவர், அங்குள்ள பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து குற்றவாளி கும்பல்கள் நடத்திய தாக்குதலில் மாயமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு குற்றவாளி கும்பல்களினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் குழியினுள் சிக்கிய ஹைதி காவல் துறையினரை மீட்க நேற்று (மார்ச் 25) கென்யா நாட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அப்போது, அதில் ஒரு கென்யா நாட்டு அதிகாரி மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான அதிகாரியைப் பற்றிய தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படாத நிலையில் அவரை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஹைதியின் உள்ளூர் ஊடகங்களில் கென்யா அதிகாரியின் சீருடையில் கொல்லப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடப்பதைப் பதிவு செய்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக, குற்றவாளி கும்பல்களின் வன்முறையினால் ஹைதி நாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டு தலைநகரை கைப்பற்ற முயற்சிக்கும் கும்பல்களை எதிர்த்து போரிட ஹைதி நாட்டுக்கு 1,000 பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என கென்யா உறுதியத்திருந்தது. இதனால், கடந்த 2024 ஜூன் மாதம் முதல் 800 அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!