மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்ப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்டிருக்கும் இந்த அறிவிக்கையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஊதிய விவரங்கள்..
ஊதியம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தினசர படி
எம்.பி.க்களின் தினசரி படி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் ஓய்வூதியம்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.