செய்திகள் :

மொயின் அலிக்கு பாராட்டு..! கேகேஆர் கேப்டன் நெகிழ்ச்சி!

post image

மொயின் அலி பந்துவீசிய விதம் பிடித்திருந்ததாக கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதில் சுனில் நரைனுக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மொயின் அலி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இது குறித்து கேப்டன் ரஹானே பேசியதாவது:

மொயின் அலி தனது வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி பந்துவீசினார். எங்களது பந்துவீச்சு அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மொயின் அலிக்கு கூடுதல் பாராட்டுகள்.

எங்கள் அணிக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. மொயின் அலி ஏற்கனவே தொடக்க வீரராகவும் களமிறங்கியுள்ளார். பேட்டிங்கில் சரியாக அமையாவிட்டாலும் பந்துவீச்சில் அசத்தினார்.

ஒவ்வொரு போட்டியும் சவால் மிக்க ஒன்றாகவும் கற்றுக்கொள்ள வாய்ப்பினையும் வழங்குகிறது.

சுனில் நரைனுக்குப் பதிலாக யாரையும் மாற்றுவீரராக சேர்க்க முடியாது. ஆனால், நான் சரியான வீரரை அணியில் சேர்த்தேன் என்றார்.

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: குல்தீப் யாதவ்

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐபிஎல் த... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் ஓவரில் ஸ்டார்க் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். 3ஆவது ஓவரில் 1, 3ஆவது பந்துகளில் முறையே இஷான் க... மேலும் பார்க்க

முதல் ஓவரிலேயே ரன் அவுட்டான அபிஷேக் சர்மா..! 25/3 ரன்களுடன் சன்ரைசர்ஸ் தடுமாற்றம்!

தில்லிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாட... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!

தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தானிடம் முதல் போட்டியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி 2ஆவது போட்டியில் லக்னௌவிடம் தோற்றது. இந்நிலையில் இந்த ஐபி... மேலும் பார்க்க

பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரோஹித் சர்மா தினமும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் முதலிரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

மும்பை இந்தியனஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று இரவு (மார்ச்.29) அஹமதாபாத்தில் மோதியது.இந்தப் போட்டிய... மேலும் பார்க்க