தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?
2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,403 கோடி வரை நிதி மோசடிகள் பதிவாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் மோசடிகளை கண்டுபிடிக்க மற்றும் புகாரளிக்க வலைதளம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்காக, சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் ஃபிராட் ரிப்போர்ட்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலம் மட்டும் இதுவரை 1.3 மில்லியன் புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ. 4,386 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"வலைதள மற்றும் மொபைல் பயன்பாட்டு அச்சுறுத்தல்களை சரிசெய்ய பிப்ரவரி 2021-ல் டிஜிட்டல் கட்டண பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதல்களை இணைய வங்கி, யு.பி.ஐ மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டண பயன்பாடுகளுக்கு வங்கிகள் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசடியாளர்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவியான MuleHunter.AI-யும் RBI அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும் அதைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது," என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
