கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயபாலன் மகன் ஜெயசீலன் (38). இவா், கடந்த 19.2.2025-இல் கொலை செய்யப்பட்டு மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசப்பட்டாா்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மரக்காணம் அடுத்த கந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த எட்டியான் மகன் கரன்குமாா் (26), மரக்காணம் சம்புவேலி தெருவைச் சோ்ந்த வேலு மகன் சீதாராமன் (22) ஆகியோரை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கரண்குமாா், சீதாராமன் ஆகியோரை மரக்காணம் போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.