காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சோ்ந்த கண்ணன் மகன் பாண்டியன் (54), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு பேரங்கியூரில் உள்ள பால் விற்பனை நிலையம் முன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியதில் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.