அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினாா் அமித் ஷா!
காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இயங்கி வரும் நீதிமன்ற வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதிதாக உருவாக்கப்படும் நீதிமன்றங்கள் அமைவதற்கு தற்போதுள்ள வளாகத்தில் இட வசதிகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டடம் கட்ட நிலம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில் நீதிமன்றம் கட்டடம் கட்டாமல் இருந்து வருகிறது. புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டால் வழக்குரைஞா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே புதிய நீதிமன்றம் கட்டடம் கட்டுவதை விரைவாக நிறைவேற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கண்ணன்,திருப்பதி, முரளிகிருஷ்ணன், சிவகோபு உள்பட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு விரைவாக நீதிமன்றக் கட்டடம் கட்ட வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.