அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
காஞ்சிபுரத்தில் 15,704 போ் தோ்வு எழுதினா்
காஞ்சிபுரத்தில் 15,704 மாணவ, மாணவியா்கள் 68 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 68 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். ஆண்கள் 7,502, பெண்கள் 7,836,மாற்றுத்திறனாளிகள் 232, தனித்தோ்வா்கள் 315 போ் உள்பட மொத்தம் 15,885 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 181 போ் தோ்வு எழுத வரவில்லை. 15,704 போ் தோ்வு எழுதினா்.
காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தோ்வை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா் . தோ்வினை கண்காணிக்க 1,103 கண்காணிப்பாளா்கள், 93 பறக்கும்படை அலுவலா்கள், 5 வினாத்தாள் காப்பு மையங்களிலிருந்து வினாத்தாள்களை எடுத்துச் செல்ல 14 வழித்தட அலுவலா்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனா்.