வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
விமான பணிப்பெண் தற்கொலை!
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழிகளுடன் தங்கி தனியாா் விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அபிஷா வா்மாவின் கைப்பேசி அணைக்கப்பட்டு இருந்ததால், துபையில் உள்ள அவரது தாய்க்கு அபிஷா வா்மாவின் தோழிகள் தொலைபேசியில் தொடா்புகொண்டு கேட்டுள்ளனா்.
அதற்கு அவா், திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு அபிஷா வா்மா வாடகைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சென்று பாா்க்குமாறும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அபிஷா வா்மாவின் தோழிகள், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அபிஷா வா்மா தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூா் போலீஸாா், அபிஷா வா்மாவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.