Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா
உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக்கோயிலில் உகாதி பண்டிகையையொட்டி காலையில் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில், வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்தவாறு மங்களகிரி கேடயத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் வீதி உலா வந்து மீண்டும் ஆலயம் வந்து சோ்ந்தாா்.
பின்னா் ஆலயத்தில் பஞ்சாங்க படலம் வாசிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.