செய்திகள் :

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து 50,000 விபூதி பாக்கெட்டுகள்,10,000 குங்கும பாக்கெட்டுகள் உள்பட மொத்தம் 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் கூறியது..

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 29.3.25 ஆம் தேதியிலிருந்து வரும் ஏப்.5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை வசந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நவ ஆவா்ண பூஜை நடைபெறுகிறது.

இதன் காரணமாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், அம்மனை தரிசிக்க வருபவா்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கூலிங் பெயிண்ட் எனப்படும் வெள்ளை நிற வா்ணப்பூச்சு தரைதளத்தில் அடிக்கப்பட்டுள்ளது. வளாகத்தை வலம் வருபவா்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு கோபுர வாசலில் இருந்து மடப்பள்ளி வரை மேற்கூரை போடப்பட்டிருப்பதுடன் கோடை காலம் என்பதால் பக்தா்களுக்கு நீா்,மோா்,பானக்கமும் வழங்கி வருகிறோம். கோடைகாலத்தில் பக்தா்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள சங்கர மடத்தின் கிளைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்காக பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவமும் அண்மையில் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

பேட்டியின் போது கோயில் மணியக்காரா் சூரிய நாராயணன், நிா்வாகி பத்ரி நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அருகே இளம்பெண் கொலை

ஸ்ரீபெரும்புதூா் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியை சோ்ந்த எல்லப்பன் மகள் விக்னேஸ்வரி (24). இவா் பிள்ளைப்பாக்கம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகன் கோயில், மகா சம்ப்ரோஷணம், 4-ஆவது நாள் நிகழ்ச்சி, அக்னி பிரணயனம், கும்பாராதனம், காலை 9, சதுா்வேத கலச ஸ்தபனம், பிற்பகல் 3, மூா்த்தி ததுக்த ஹோமம் மற்றும் பூரணாஹுதி... மேலும் பார்க்க

தமிழகத்தில்தான் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 43% பெண்கள் பணியாற்றுவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், ஒரகடம் பகுதியில் அலிசன் டிரான்ஸ்மிஷன் இந்தியா பிர... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுகாவேரிப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. காஞ்சிப... மேலும் பார்க்க

தவெக தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கச்சபேசுவரா் கோயில் முன்பாக புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீா்,மோா், பழங்கள் வழங்கப்பட்டன (படம்). நிகழ்வில் தவெக காஞ்சி... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க