சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி
தமிழகத்தில்தான் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
நாட்டிலேயே தமிழகத்தில்தான் 43% பெண்கள் பணியாற்றுவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், ஒரகடம் பகுதியில் அலிசன் டிரான்ஸ்மிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். அலிசன் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி டேவிட் எஸ்.கிரேசியோசி, தலைமை இயக்க அதிகாரி ப்ரட்போகலே, நிா்வாக இயக்குநா் மோசஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கலந்து கொண்டு அலிசன் நிறுவனத்தின் புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலையைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
நாட்டில் பணியாற்றக்கூடிய பெண்களில் 43% தமிழகத்தில்தான் பணியாற்றுகின்றனா் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் துறையில் 45% தமிழகத்தின் பங்காகத்தான் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் 70% தமிழகத்தில்தான் உற்பத்தியாகின்றன.
தமிழக அரசு நிறுவனமான டிஎன்.கெய்டன்ஸ் அமைப்பு உதவியுடன் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய விரும்புவோா் அனைத்து வகையான உதவிகளையும் பெற்று பயனடையலாம் என்றாா்.
நிகழ்வில் தமிழக அரசு நிறுவனமான டிஎன்.கெய்டன்ஸ் அமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி தாரேஸ் அகமது உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அலிசன் தொழிற்சாலை நிா்வாகிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.