மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்
காஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் தலைமையில் கோட்ட அலுவலகங்களில் மின்நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மின்பகிா்மான வட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து செயற்பொறியாளா் அலுலகங்களிலும் சனிக்கிழமை (ஏப். 5) மின்நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து, கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மின்கட்டணம், பழுதடைந்த மின் மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்னழுத்தம் தொடா்பான புகாா்களை தெரிவித்து பயன்பெறலாம். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு குறைதீா் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய சாலையில் செயற்பொறியாளா் வடக்கு அலுவலகம், ஒலிமுகம்மதுபேட்டையில் உள்ள தெற்குப் பிரிவு அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் சந்நிதி தெருவில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.