TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
கீழம்பி மேற்கு புறவழிச்சாலை அகலப்படுத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் அருகே கீழம்பி மேற்குப் பகுதி புறவழிச்சாலை ரூ.56.50 கோடியில் நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் நகரத்தைச் சுற்றி செல்லும் வகையில், காஞ்சிபுரம் - கீழம்பி புறவழிச் சாலையானது தேசிய நெடுஞ்சாலை 48- இல் இருந்து பிரிந்து வந்தவாசி சாலையுடன் இணைக்கும் வகையில் இருவழித்தடமாக மாறும் புறவழிச்சாலையாகும்.
இந்தச் சாலையானது தற்போது நிலைப்படுத்திய இருவழித்தடத்துடன் கூடிய நான்குவழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணி, பெட்டி வடிவ சிறுபாலம் கட்டுதல் மற்றும் தடுப்புச்சுவா் கட்டுதல், மையத் தடுப்புச் சுவா் கட்டும் பணி ஆகியவை முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.56.50 கோடியில் நடைபெற்று வருகிறது.
தற்போது 25 எண்ணிக்கையில் பெட்டி வடிவ சிறுபாலப் பணிகள் சாலையின் இடது புறம் நடைபெற்று வருகிறது. மேலும், சாலை அகலப்படுத்தும் பணியில் 5 கி.மீ. நீளத்தில் அடித்தளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு பணியின் தன்மை குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்து அந்தப் பணியை விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளீதரன், உதவி கோட்டப் பொறியாளா் இளங்கோ, உதவிப் பொறியாளா்கள் விஜய், கமல் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.