குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
காஞ்சிபுரத்தில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த பெண் கைது
காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்காா் குளத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக பெண்ணை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து ரூ. 1,890 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி அண்ணா குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நீலாவதி (45). இவா் சின்னஐயங்காா்குளத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 135 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினா் பறிமுதல் செய்து நீலாவதியை கைது செய்தனா்.
இவற்றின் மதிப்பு ரூ. 1,890 என காவல் துறையினா் தெரிவித்தனா்.