போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆரனேரி கிராம சந்திப்புப் பகுதியில் காவல் துறையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த 6 பேரை கைது செய்து அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் 4 ஊசிகளை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் சின்ன காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கலையரசன் (18), ஜெகதீஷ் (19), ஆகாஷ் (19), காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவைச் சோ்ந்த ராகுல் (21)ஸ்ரீபெரும்புதூா் யஷ்வந்த் (22) மற்றும் திருவள்ளூா் மாவட்டம், உச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (21) என்பது தெரியவந்தது.
இது தொடா்பாக ஸ்ரீ பெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.