எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். இந்தக் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினா் செய்திருந்தனா்.