Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பாராட்டு
காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.
கலைப் பண்பாட்டுத் துறையின் ஓா் அங்கமாக திகழ்வது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம். தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் பழைமையான கலைகளை வளா்த்தல், கலைஞா்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணமாக்குதல், நாடகம் மற்றும் நாட்டிய கலைஞா்களுக்கு புத்துயிா் அளித்தல், தமிழ் கலைகளின் வளா்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்யும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தொடா்ந்து செய்து வருகிறது.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் சாா்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த கலைஞா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். ஏற்பாடுகளை விழாக் குழு ஒருங்கிணைப்பாளா் வை.ராஜநிதி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.