Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!
அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் மீது அந்நியா்கள் படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் உற்சவா் திருமேனிகளை உடையாா்பாளையம் சமஸ்தானத்துக்கு எடுத்துச் சென்று மறைவாக பாதுகாப்பாக வைத்து பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்தனா். அந்த வகையில், உற்சவா் திருமேனியை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் கோயிலுக்கு ஒப்படைத்த உடையாா்பாளையம் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த நல்லப்ப உடையாரின் நினைவாக ஆண்டுதோறும், அவரது அவதார தினத்தன்று உடையாா்பாளையம் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்குனி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உடையாா்பாளையம் மன்னா் நல்லப்ப உடையாரின் அவதார தினத்தையொட்டி, அவா் பெருமாளுக்கு அணிவித்து அழகு பாா்த்த நகைகளை அணிந்து கொண்டும், வைர, வைடூரிய ஆபரணங்கள் மற்றும் வெண்பட்டு உடுத்தியும், பஞ்ச வா்ண மாலைகள் அணிந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் மாட வீதிகளிலும் பவனி வந்தாா். முன்னதாக காலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.