Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை 24-ஆம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து 7-ஆவது நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தோ் நிலைக்கு திரும்பி வந்து பெருமாள் மாலையில் சந்நிதிக்கு எழுந்தருளியதும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
சனிக்கிழமை மாலையில் குதிரை வாகனத்தில் வேடுபறி உற்சவமும்,நாளை ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. ஏப்ரல் முதல் தேதி புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.